Sejarah Sekolah


SEJARAH SEKOLAH
SJK(T) LADANG KUALA BERNAM,
36009 TELUK INTAN, PERAK.





SJK(T) Ladang Kuala Bernam telah ditubuhkan pada  1940-an. En.Kailasam telah dilantik oleh pihak pengurusan ladang untuk mentadbir sekolah ini. Dua orang guru telah dilantik dan seramai 52 orang murid telah mula belajar di sekolah ini.
     Pada 1965, enrolemen murid meningkat kepada 105 orang. Tenaga Pengajar juga meningkat kepada 6 orang guru. Pentadbirnya bernama En.Narayanan.

Pada 1990, Pn.Mariammah selaku Guru Besar ketika itu telah mendapatkan bekalan air dan elektrik secara percuma daripada pihak pengurusan ladang.
       Pada 1991, beberapa buah bilik telah dibina di bawah pentadbiran En.P.Nadesan. Pada 2005, En.Kathirkaman Guru Besar sekolah ini telah berusaha untuk menceriakan sekolah ini.

Pada tahun 2007, Pn.Santha Kumari telah dilantik sebagai Guru Besar sekolah ini. Enrolemen pada masa itu ialah seramai 10 orang sahaja. Pada 16.12.2009, En.G.Gopal telah dilantik sebagai  Guru Besar sekolah ini. Seramai 4 orang guru berkhidmat di sekolah ini. Enrolemen murid pada masa meningkat berkat usaha Guru Besar sekolah ini iaitu  seramai 12 orang.
          Pada tahun 2010 enrolemen murid di sekolah ini adalah seramai 11 orang. Sekolah ini telah mencatat sejarah dalam Peperiksaan Ujian Pencapaian Sekolah Rendah (UPSR)  dengan pencapaian 100% dan seorang murid Saarumathy a/p Sithambaram mendapat 7A dalam UPSR. Dua orang murid lagi turut mendapat keputusan yang membanggakan.

          Pencapaian cemerlang dalam UPSR ini telah membolehkan sekolah ini mendapat tempat pertama di antara 28 buah sekolah SJKT dan tempat kedua di antara SK, SJKC dan SJKT serta tempat ke-14 pada peringkat negeri.

          Pada tahun ini enrolemen murid sekolah ini telah meningkat kepada 20 orang. Seramai 5 orang guru berkhidmat di bawah pentadbiran Guru Besar, En.G.Gopal. Kini, sekolah ini sedang menuju ke arah kecemerlangan di bawah Guru Besar yang berdedikasi dan berkaliber.















பள்ளி வரலாறு
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி கோல பெர்ணம்
36009 தெலுக் இந்தான், பேராக்.





1940-ல் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி கோல பெர்ணம் இயங்க துவங்கியது. தோட்ட நிர்வாகத்தின் மூலம் திரு.கைலாசம் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பள்ளி இரண்டாம் பிரிவில் நடத்தப்பட்டது.

17.01.1941-ல் இரு ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 52 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வந்தன்ர். இப்பள்ளி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இரு பிரிவுகளாக பாடம் கற்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் சுற்றளவு 18 மீட்டர் x 7மீட்டர்.

     1952-ல் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 1957-ல் பள்ளி கட்டடம் விரிவாக்கப்பட்டது. 1960-ல் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 84-ஆக உயர்ந்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. தலைமையாசிரியர் உட்பட.

1965-ல் மாணவர்களின் எண்ணிக்கை 105ஆக உயர்ந்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. தலைமையாசிரியர் திரு.நாராயணன் பணியில் இருக்கும்போது ஆசிரியர் அறையும், அலுவலமும் கட்டப்பட்டது.

     26.09.1990-ல் இப்பள்ளிக்கு ஒரு தட்டச்சுப்பொறி டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களால் அளிக்கப்பட்டது. 03.06.1983-ல் தோட்டத்தின் நிர்வாகியான் திரு.இராஜ பத்மன் அவர்களால் சாலைக்கும் பள்ளிக்கும் இடையில் ஒரு பாலம் கட்டப்பட்டது.

02.07.1990-ல் இப்பள்ளிக்கு தலைமையாசிரியை திருமதி.மாரியம்மா அவர்களின் முயற்சியால் தோட்ட நிர்வாகம் மின்சாரம் மற்றும் நீரை இலவசமாக வழங்கியது.16.01.1991-ல் திரு.நடேசன் PJK அவர் பொறுப்பேற்றபோது பள்ளிக்கு பல உதவிகள் கிடைக்கப்பெற்றன.

31.10.2005-ல் தலைமையாசிரியர் திரு.கதிர்காமன் பொறுப்பேற்றார். அவர் மீண்டும் ப்ள்ளிக்கு சாயம் பூச ஏற்பாடு செய்தார். இக்காலக்கட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

16.12.2008-ல் திரு.கோபால் புதிய தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். மொத்தம் 12 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். 2010-ல் தலைமையாசியர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியினாலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

     2010-ல் தலைமையாசியர் மற்றும் ஆசிரியர்களின் கடுமையான முயற்சியினாலும் இப்பள்ளி இதுவரை காணாத ஒரு வரலாற்றைப் படைத்து. யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் இப்பள்ளி 100 சதவிகிதத்தை அடைந்தது. மாணவி சாருமதி த/பெ சிதம்பரம் 7 ஏக்களைப் பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்தார். மற்றும் இரு மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சி அடைந்தனர்.

இச்சிறந்த தேர்ச்சியின் மூலம் இப்பள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே முதல் நிலையை அடைந்தது. மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி இரண்டாம் நிலையை பிடித்தது. பேராக் மாநிலத்தில் 14-ம் நிலைக்கு முன்னேறியது கோல பெர்ணம் தமிழ்ப்பள்ளி.

இவ்வருடம் இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 5-ஆக ஆக்கப்பட்டது. சிறந்த தலைமைதுவத்தின்கீழ் இப்பள்ளி மென்மேலும் வெற்றிகளைப்பெற பீடுநடை போடுகின்றது.



 

PANDANGAN SEKO LAH SELEPAS TAHUN 2010